Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரூ.1.60 கோடி ஹவாலா பணத்துடன், திருச்சியை சேர்ந்த 4 பேர் கைது

விழுப்புரம் பஸ் நிலையத்தில் நேற்று நள்ளிரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 4 இளைஞர்கள்  பைகளுடன் அங்கு நின்று கொண்டிருந்தனர். அவர்களின்  நடவடிக்கைகளை கவனித்த போலீசார் 4 பேரையும் பிடித்து  விசாரித்தனர். பின்னர் அவர்கள் வைத்திருந்த  பைகளை சோதனை போட்டினர்.

அப்போது பைக்குள் பட்டு கட்டாக பணம் இருந்தது. அனைத்தும்  ரூ.500 நோட்டுகள். அவற்றை எண்ணிப்பார்த்தபோது  அதன் மதிப்பு ரூ. 1 கோடியே 60 லட்சம் என  தெரியவந்தது.

அந்த பணம் குறித்து  4பேரிடமும் போலீசார் விசாரித்தபோது, அந்த பணத்தை திருச்சியில் ஒரு நபரிடம் கொடுத்தால்  தங்களுக்கு  ஆளுக்கு ரூ.1 லட்சம்  கிடைக்கும். திருச்சியை சேர்ந்த நாங்கள் இந்த பணத்தை வாங்க வந்தோம். மீண்டும் திருச்சி புறப்பட  இருந்தபோது  போலீசிடம் சிக்கி கொண்டோம் என்றனர்.

இது தொடர்பாக   திருச்சியை சேர்ந்த  முக்கிய புள்ளியை போலீசார் தேடுகிறார்கள்.  கைதானவர்களின் பெயர் ராஜா முகமது,  ரியாஸ், சித்திக், மேலும் ஒருவர்.

error: Content is protected !!