ஏ.எஸ்.பி. நிலையிலான 5 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு எஸ்.பி.க்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஆர்.உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் தெற்கு சரக துணை ஆணையர் ஆகாஷ் ஜோஷி, நெல்லை மேற்கு துணை ஆணையராக அன்ஷூல் நாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகர பாதுகாப்புப்பிரிவு துணை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி சுந்தர வடிவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் தீவிரவாத தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளராக ரமேஷ் பாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் நகர வடக்கு துணை ஆணையராக ரமேஷ் கிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆவடி காவல் ஆணையராக செங்குன்றம் துணை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி மகேஸ்வரி நியமனம்
தாம்பரம் காவல் ஆணையரக தலைமையகம் மற்றும் நிர்வாகம் துணை ஆணையராக கண்ணன் நியமனம்
திருச்சி நகர வடக்கு துணை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி பனாவத் அரவிந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை சிபிசிஐடி வடக்கு மண்டல எஸ்பியாக அர்புதா ராஜ்புத் நியமனம்.
