Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மரண விளிம்பில் 40 பயணிகள்.. ரியல் ஹீரோவான டிரைவர்

​ கோவையில் நூற்றுக் கணக்கான உயிர்களைப் பணையம் வைத்தபடி ஓடிக் கொண்டு இருந்த தனியார் பேருந்து ஒன்றில் திடீரென பிரேக் ஃபெயிலியர் (Brake Failure) ஏற்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோயம்புத்தூரில் இருந்து கோவில்பாளையம் வழியாக குன்னத்தூர் நோக்கிப் புறப்பட்ட அந்தத் தனியார் பேருந்தில், வழக்கம் போல கோவில்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்த போது அந்த பேருந்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து கொண்டு இருந்தனர்.

பேருந்து கோவில்பாளையம் சாலையைக் கடக்க முயன்ற அந்த நேரத்தில் ஓட்டுநர் பிரேக் மிதிக்க முயன்ற போது, அது துண்டிக்கப்பட்டு வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததை உணர்ந்து அதிர்ச்சி அடைந்தார்.

பேருந்துக்குள் இருந்த பயணிகள் மரண பயத்தில் கூச்சலிடத் தொடங்கினர்.
​அந்த இக்கட்டான விநாடிகளில், சற்றும் பதற்றம் அடையாத ஓட்டுநர், சாலையின் ஓரத்தில் இருந்த மண் திட்டு மற்றும் மேடான பகுதிகளை நோக்கிப் பேருந்தைத் திருப்ப முயன்று வேகத்தைக் குறைக்கப் போராடினார். பேருந்து கட்டுப்பாடின்றி வருவதைக் கண்டுகொண்ட அங்கு இருந்த உள்ளூர் பொதுமக்களும், சுதாரித்துக் கொண்டு உடனடியாகச் செயல்பட்டனர்.

சாலையின் இருபுறமும் இருந்த இதர வாகனங்களை அப்புறப்படுத்தி, பேருந்து ஓரளவுக்கு வேகம் குறைந்த தருணத்தில், கற்களைச் சக்கரங்களின் அடியில் முட்டுக் கொடுத்துப் பேருந்தை நிறுத்த உதவினர்.

நொடிப் பொழுதில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, 40-க்கும் மேற்பட்ட பயணிகள் எவ்வித காயமுமின்றி நல்வாய்ப்பாகப் உயிர் தப்பினர். ஆபத்தான சூழலிலும் அசாத்தியமான தற்காப்புத் திறனை வெளிப்படுத்தி, சாதுரியமாகப் பேருந்தை நிறுத்திக் காட்டிய அந்த ஓட்டுநரைக் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!