திருவாரூர் அருகே குட்கா மற்றும் கஞ்சா வியாபாரிகளிடம் கடந்த 2 ஆண்டுகளாக ‘ஜிபே’ மூலம் ரூ.2,000, ரூ.3,000 என தொடர்ந்து லஞ்சம் பெற்று வந்த குடவாசல் தனிப்படை தலைமை காவலர் மனோகரன், நன்னிலம் தலைமை காவலர் பாரதிராஜா ஆகிய இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கைதான வியாபாரியின் செல்போனை ஆய்வு செய்தபோது இந்த டிஜிட்டல் முறைகேடு அம்பலமானது. இப்புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
