Skip to content
Home » இன்றும் நாளையும் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

இன்றும் நாளையும் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு… தமிழகத்தில் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக இன்று கோவை, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களிலும், நாளை நீலகிரி, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலும் கனமழை பெய்யும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!