புதிதாக பொறுப்பேற்ற அதிமுக திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் நீதிமன்றம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய வருகை தருவதாக அறிவிக்கப்பட்டதால் அதிமுகவினர் ஏராளமான திரண்ட நிலையில் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 900 மீ தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
