இமாச்சல பிரதேசத்தில் உள்ள 68 தொகுதிகளுக்கும் கடந்த மாதம் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இன்று அங்கு ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது. ஆரம்பத்தில் பா.ஜ. முன்னிலையில் இருந்தது. பின்னர் காங்கிரஸ் முன்னிலை பெற்றது. 10 மணி நிலவரப்படி காங்கிரஸ் 33 இடங்களிலும், பா.ஜ.க. 31 இடங்களிலும் சுயேச்சைகள் 4 இடங்களிலும் முன்னிலையில் இருந்தனர்.10.30 மணிக்கு பா.ஜ. 33 இடங்களிலும், காங்கிரஸ் 32 இடங்களிலும் முன்னணியில் இரந்தது.
ஆட்சி அமைக்க 35 இடங்கள் தேவை. அந்த பெரும்பான்மை யாருக்கும் கிடைக்கவில்லை. எனவே முன்னணியில் உள்ள சுயேச்சைகளுக்கு இப்போதே பா.ஜ.க. வலை விரித்து விட்டதாக கூறப்படுகிறது. பிற்பகல் 2 மணிக்கு தான் ஓரளவு சரியான முடிவுகள் தெரியும் என்ற போதிலும், பா.ஜ.க. இப்போதே சுயேச்சைகளை பிடிக்க தொடங்கி விட்டதால் இமாச்சல் அரசியலில் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது.
காங்கிரசுக்கு 35 அல்லது அதற்கு மேல் சீட் கிடைக்காமல் 34 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும் அங்கு சுயேச்சைகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க பா.ஜ. எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிறது. இதனால் இமாச்சலில் சுயேச்சைகளுக்கு இப்போது ரொம்ப,,, ரொம்ப,,,,, கவுரவம் அதிகரித்துள்ளது.