Skip to content
Home » அரியலூரில்…. ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா

அரியலூரில்…. ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா

அரியலூர் மாவட்டத்தில்  கடந்த ஆண்டு ஊர்க்காவல் படைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 34 நபர்களுக்கு 21.11.2022 முதல் 45 நாட்கள் உடற்பயிற்சி மற்றும் கவாத்து பயிற்சி  வழங்கப்பட்டன.

பயிற்சி காலம் முடிந்து  பணிக்கு செல்ல உள்ள நிலையில் அவர்களுக்கு  இன்று பயிற்சி நிறைவு விழா அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.அரியலூர் மாவட்டததில் புதிதாக சேர்க்கப்பட்ட  ஊர்க்காவல் படையினருக்கு  பயிற்சி நிறைவு விழா நடந்தது.  காவல் கண்காணிப்பாளர் .பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்படி, அரியலூர் மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் மணவாளன் கலந்து கொண்டு  ஊர்க்காவல் படையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் காவல் துறையினருடன் இணைந்து நல்ல முறையில் பணியாற்ற வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

நிகழ்ச்சியில்  ஊர்க்காவல் படை வட்டார தளபதி ஜீவானந்தம், அரியலூர் ஆயுதப்படை உதவி ஆய்வாளர் குமரன், தலைமைக் காவலர் பால்பாண்டி, முதல் நிலைக் காவலர் ஆனந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!