Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெரம்பலூர் அருகே கோர விபத்து… 3 பேர் பலி

பெரம்பலூர் அருகே கோர விபத்து… 3 பேர் பலி

பெரம்பலூர் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலையில் முன்னால் சென்ற ஆம்னி பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழ்ந்துள்ளனர். ராமநாதபுரத்தை சேர்ந்த கார்த்தி என்பவர் அவரது மனைவி சூரியா மற்றும் நண்பர்களுடன் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் தனது சகோதரர் திருமணத்திற்காக ராமநாதபுரம் வந்து நேற்று இரவு சென்னை புறப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 2.30 மணியளவில் முன்னால் சென்ற ஆம்னி பேருந்து மீது கார் அதிவேகமாக மோதியதில் காரில் பயணம் செய்த காளீஸ்வரன், பிரபாகரன் ஆகியோர் சம்பவத்தில் உயிரிழந்தனர். கார்த்தி என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் விபத்தில் படுகாயமடைந்த கண்ணதாசன், கெணடி, சூரியா, சரண்யா ஆகியோர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறனர்.

சூரியா என்பவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதால் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!