Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருப்பத்தூர் அருகே பயங்கரம்.. ஆண், பெண் வெட்டிக் கொலை

திருப்பத்தூர் மாவட்டம், தோரணம்பதி பகுதியில் ஆண் மற்றும் பெண் இருவர் மர்மமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரே பகுதியில் இரண்டு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உயிரிழந்த இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!
Secret Link