Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பூட்டை உடைத்து வீட்டில் பணம் கொள்ளை!…திருச்சி க்ரைம்

வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு... திருச்சி க்ரைம்

கொத்தனார் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

திருச்சி ஆக 5 – திருச்சி வடக்கு தாராநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 43 )இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். கடந்த 31ந் தேதி சக்திவேல்
வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவியும் வெளியே சென்று விட்டார்.
இந்நிலையில்பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம ஆசாமி வீட்டில் இருந்த ரூபாய் 30 ஆயிரம் பணத்தை திருடி கொண்டு அங்கிருந்து ஓடி விட்டனர். அப்பொழுது வீட்டிற்கு வந்த சக்திவேலின் குழந்தைகள் இதனை பார்த்து உடனடியாக அவருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்து சக்திவேல்
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றரர்.இது குறித்து சக்திவேல் காந்தி மார்க்கெட் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேல் வீட்டில் பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆன்லைனில் என்எல்சி ஊழியரிடம் ரூ. 2 லட்சத்து 61 ஆயிரம் பணம் மோசடி

திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் ரெங்கசாமி (வயது 66 ) இவர் என்எல்சியில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். கடந்த 31ந் தேதி இவருடைய செல்போனை மர்ம ஆசாமி ஒருவர் ஹேக் செய்து ரூ 2 லட்சத்து 61 ஆயிரத்து 141 பணத்தை ஐந்து முறையாக வங்கி கணக்கில் இருந்து எடுத்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரெங்கசாமி உடனடியாக வங்கியை தொடர்பு கொண்டு ஊழியர்களிடம் கூறியுள்ளார்.இதையடுத்து ரெங்கசாமி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஓய்வு பெற்ற என்எல்சி ஊழியரிடம் ரூபாய் 2 லட்சத்து 61 ஆயிரத்து 141 பணத்தை ஹேக் செய்து திருடிய மர்ம ஆசாமியை வலைவிசி தேடி வருகின்றனர்.

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.2 லட்சத்து 21 ஆயிரம் பணம் மோசடி

திருச்சி ஆகஸ்ட் 5- திருச்சி மன்னார்புரம் தெற்கு தெருவில் சேர்ந்தவர் முரளிதரன் (வயது 48) இவரிடம் கடந்த ஜூலை 18 ந்தேதி சையது முகமது இம்ரான் என்பவர் செல்போனில்வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு பேசின அந்த மர்ம ஆசாமி வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி முரளிதரன் ரூபாய் 2 லட்சத்து 21 ஆயிரத்து 500 பணத்தை அவரது வங்கிக் கணக்கில் பல கட்டங்களாக செலுத்தியுள்ளார்.
இதையடுத்துமர்ம ஆசாமி முரளிதரனுக்கு விமான டிக்கெட், விசா மற்றும் உள்ளிட்ட
ஆவணங்களை அனுப்பி உள்ளார். அந்த ஆவணங்களை முரளிதரன் சோதனை செய்து பார்த்தபோது அது போலி என தெரிய வந்தது. இதையடுத்து அந்த மர்ம ஆசாமிக்கு போன் செய்த போது அவர் எடுக்கவில்லை. பிறகு தான் முரளிதரனுக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து முரளிதரன் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முரளிதரனை ஏமாற்றிய மர்ம ஆசாமியை தொலைபேசி தேடி வருகின்றனர்

வாலிபர் தூக்கு மாட்டி தற்கொலை

திருச்சி உய்யக் கொண்டான் திருமலை பகுதி லாவண்யா கார்டன் 3வது தெரு பகுதி சேர்ந்தவர் குருமணி இவரது மகன் ஹரி (28) இவர் போட்டோகிராபி எடிட்டிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. தற்பொழுது அந்த இளம் பெண் லண்டனில் மேல்படிப்பு படித்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் செல்போனில் பேசியது தொடர்பாக மன உளைச்சலில் வீட்டின் அறையில் இருந்த ஹரி திடீரென்று தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அவரது பெற்றோர் அதிர்ச்சிடைந்து உடனடியாக அரசு மருத்துவமனை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தூக்கில் சடலமாக தொங்கிய ஹரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் குறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!