கலெக்டர் வண்டியை ஜெப்தி பன்ன வந்தா யாரையும் காணோம்! அடுத்த தடவ விடமாட்டோம்! சார்பு நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் கலெக்டர் அலுவலகம் வந்த அட்வகேட் டீமால் பரபரப்பு!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மணியார் குப்பம் பகுதியைச் சேர்ந்த நடராஜன் மற்றும் அவருடைய வாரிசுதாரர்களுக்கு சொந்தமான மூன்று ஏக்கர் ஒரு செண்ட் நிலத்தை

கையகப்படுத்தி 1986 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர்களுக்கு கொடுக்க வீட்டு மனைகளாக மாற்றி மாவட்ட நிர்வாகத்தால் கொடுக்கப்பட்டுள்ளது.
அதற்கு இழப்பீடாக 4 கோடியே 66 லட்சம் கொடுக்க வேண்டும் என அறிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்நாள் வரை 1 கோடியே 61 லட்சம் மட்டுமே கட்டியுள்ளதாக தெரிகிறது.
இதன் காரணமாக நடராஜன் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் காரணமாக திருப்பத்தூர் வழக்கறிஞர் சங்க தலைவர் ரவிக்குமார் இது குறித்த வழக்கை வாதாடி வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று திருப்பத்தூர் சார்பு நீதிமன்றம் மாவட்ட ஆட்சியரின் கார் மற்றும் டேபிள்கள், கணினிகள், ஆகியவற்றை பறிமுதல் செய்து கொள்ளலாம் என தீர்ப்பு வழங்கியது.
அதன் காரணமாக ரவிக்குமார் தலைமையில் வழக்கறிஞர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர் அப்போது ஆட்சியரின் கார் வெளியே சென்று இருப்பதை அறிந்து செய்தியாளர்களை சந்தித்தார்..
அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வழக்கறிஞர் ரவிக்குமார்.
நாங்கள் வருவதை அறிந்து மாவட்ட ஆட்சியர் காரை எடுத்துச் சென்றுள்ளார் ஆனால் அடுத்த முறை வரும்போது கண்டிப்பாக ஜப்தி செய்வோம் எனவும் எச்சரித்தார் மேலும் உடனடியாக நடராஜன் குடும்பத்திற்கு சேர வேண்டிய பணத்தை கொடுக்க நடவடிக்கை எடுங்கள் எனவும் கூறியது குறிப்பிடத்தக்கது.
