மேற்கு வங்கத்தில் வெற்றி பெற்ற பிறகு, டெல்லியை கைப்பற்றுவேன் என மம்தா கூறியுள்ளார். தனக்கு அதிகாரம் முக்கியமில்லை என்ற அவர், டெல்லியில் பாஜக வீழ்த்தப்படுவதே முக்கியம் என்றார். வங்கத்தில் பிறந்த தான் வங்கத்திலேயே தனது உயிரை விடுவேன் என பேசினார். மேலும், பாஜகவுக்காக பணியாற்றும் அதிகாரிகளின் பெயரை குறித்து வைத்திருப்பதாகவும் தங்களைத் தோற்கடிக்கும் சக்தி அவர்களுக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
