Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகத்தில் மேலும் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் ..

தமிழகத்தில் இன்று உள்துறை செயலாளர், சென்னை மாநகராட்சி கமிஷனர் மற்றும் 10 மாவட்ட கலெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். தொடர்ந்து மேலும் 30 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா பிறப்பித்த உத்தரவு..

* டில்லியில் உள்ள தமிழக இல்லத்தின் கூடுதல் கமிஷனர்- ஆஷிஷ்குமார்

* போக்குவரத்துத் துறை கமிஷனர் – ஜடக் சிரு

* கைத்தறித்துறை இயக்குநர் – சண்முக சுந்தரம்

* மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கமிஷனர் – கஜலட்சுமி

* மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை இயக்குநர் – கார்த்திகா

* சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குநர்- மோகன்

* ஜவுளித்துறை கமிஷனர் – ஜெயகாந்தன்

* ஈரோடு வணிக வரித்துறை இணை கமிஷனர்- தாக்கரே சுபம் தியோன்தர் ராவ்

* தமிழக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சொசைட்டி இயக்குநர்- சீதாலட்சுமி

* தொழில்முனைவோர் மேம்பாட்டு இயக்குநர் அமிர்த ஜோதி

* கால்நடைத்துறை கமிஷனர் – மகேஷ்வரி

* தொழில்நுட்ப கல்வி கமிஷனர் – ஆபிரஹாமும்

* குழந்தைகள் வளர்ச்சி திட்டங்களின் இயக்குநர் -மெர்சி ராணியும்

* ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் – ஸ்ரீதரும்

* சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநர் – முரளிதரன்

* ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை கமிஷனர் – ஆனந்த குமார்

* தமிழக சுகாதார திட்டங்களின் இயக்குநர் – அருண் தம்புராஜூ

* தமிழக மின்னணு ஆணைய தலைவர் மற்றும் மின்னணு நிர்வாக இயக்குநர் கோவிந்த ராவ்

*ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துத்துறை கூடுதல் இயக்குநர் – ஷரண்யா ஆரி

* குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவை திட்ட இயக்குநர் – ஜானி டாம் வர்கீஸ்

* கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர்- காயத்ரி கிருஷ்ணன்

* நில சீர்திருத்தத்துறை கமிஷனர் – சங்கர்

* தொழிற்சாலைகள் மற்றும் வணிகத்துறை கூடுதல் கமிஷனர் – சிவ சவுந்திரவள்ளி

* பேரிடர் மேலாண்மை இயக்குநர் – மோகனசந்திரன்

* ஹிந்து சமய அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் – சுகுமார்

* தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு கூடுதல் மேலாண் இயக்குநர் – பொற்கொடி

* தமிழக சிறுதொழில் வளர்ச்சி கழகத்தின் செயலாளர் – கார்த்திக்

* தமிழக பாடநூல் கழக மேலாண் இயக்குநர் – சங்கர்

* தமிழக காதி மற்றும் கிராமப்புற தொழிற்சாலை வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி – மகேஷ்வரி

* தமிழக சாலை திட்டங்களின் திட்டஇயக்குநர் – ராமன்

*தமிழக கடல்சார் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி- வள்ளலார்

*சென்னை மெட்ரோபொலிட்டன் வளர்ச்சி ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி – கற்பகம்

*தமிழக சிமென்ட் கழக நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் அஜய் யாதவ் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!