Skip to content
Home » சிங்கப்பூர் சபாநாயகர்-பெண் எம்.பி. கள்ளக்காதல்….பிரதமர் கண்டிப்பு….. ராஜினாமா

சிங்கப்பூர் சபாநாயகர்-பெண் எம்.பி. கள்ளக்காதல்….பிரதமர் கண்டிப்பு….. ராஜினாமா

  • by Senthil

காற்று புகாத இடமே இல்லை என்பது போல இப்போது கள்ளக்காதல் இல்லாத இடமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அடிதட்டில் இருந்து மேல்மட்டம் வரை  வியாபித்து இருக்கிறது கள்ளக்காதல்.  சாதாரண சாமான்யர்கள் முதல்  ஆட்சியாளர்கள் வரை அனைவரையும்  இந்த கள்ள்காதல்  வளைத்து பிடித்து உள்ளது என்தற்கு  சிங்கப்பூரில் நடந்த இந்த சம்பவம் ஒரு உதாரணம்.

சிங்கப்பூரில் பாராளுமன்ற சபாநாயகரும், ஒரு பெண் எம்.பி.யும் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக ராஜினாமா செய்துள்ளனர். அவர்களின் ராஜினாமாவை பிரதமர் அலுவலகம் (பிஎம்ஓ) திங்கள்கிழமை நேற்று அறிவித்தது.சபாநாயகர் டான் சுவான் ஜின் (54) மற்றும் செங்லி ஹுய்(47) எம்.பி. ஆகியோரின் ராஜினாமாவை பிரதமர் லீ சியென் லூங் ஏற்றுக்கொண்டார்.

சபாநாயகர் டானுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். செங்லிக்கு திருமணமாகவில்லை.  இவர்கள் ராஜினாமா தொடர்பாக பிரதமர் பிரதமர் லீ சியென் லூங் கூறும்போது, மக்கள் செயல் கட்சியின் உயர்ந்த தகுதி மற்றும் தனிப்பட்ட நடத்தையை பேணுவதற்காக சபாநாயகர் மற்றும் எம்.பி.யின் ராஜினாமா ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் தகாத உறவில் இருந்தனர். அதை கடந்த பிப்ரவரி மாதம் நிறுத்த சொன்ன பிறகும் அது தொடர்ந்தது. இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு சபாநாயகரிடம் கூறினேன்.ஆனால் அது தொடர்ந்தபடியே இருந்தது. இதனால் அவர்களது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டேன் என்றார்.  டான் சுவான் ஜின் எழுதிய ராஜினாமா கடிதத்தில் தனது குடும்பத்தில் கவனம் செலுத்த அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!