பீகாரில் நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய முயன்ற 9 பேர் கைது செய்யப்பட்டனர். பீகாரின் லக்கிசராய் மாவட்டத்தில் நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய முயன்றனர்.
பீகாரின் லக்கிசராய் மாவட்டத்தில் நடைபெற்ற நீட் மறுதேர்வின் போது, ஆள்மாறாட்டம் செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். பதிவுசெய்யப்பட்ட தேர்வர்களுக்கு பதிலாக இவர்கள் தேர்வில் பங்கேற்றதாக சந்தேகிக்கப்படுவதாக காவல் கண்காணிப்பாளர் (SP)பிரேர்னா குமார் கூறினார்.
பயோமெட்ரிக் ஆபரேட்டர்கள் மற்றும் இடைத்தரகர்கள் உட்பட, இந்த முறைகேட்டுடன் தொடர்புடையதாக கூறப்படும், மேலும் 10 முதல் 12 பேரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில் தற்போது 9 பேரை போலீசார் கைது செய்தனர். உத்தரப்பிரதேசத்தில் நீட் மறுதேர்வில் முறைகேடு செய்ய முயன்ற மாணவரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் ஆடைக்குள் சிம்கார்டு, பழைய கேள்வித்தாளை மறைத்து எடுத்து சென்ற மாணவர் கைது செய்யப்பட்டார்.
