Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது..

நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில்  8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் அந்த அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.  3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றியுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசி அணி முதலில் பேட்டிங் செய்தது.  அந்த அணி வீரர்கள் யாரும் நிலைத்து விளையாடவில்லை. தொடர்ந்து அவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 34.3 ஓவரில் 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் நியூசிலாந்து அணி இழந்தது. இந்திய அணியின் முகமது ஷமி 3, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 108 ரன் இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி 20.1 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 111ரன்களை எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரையும் வென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!