2007ம் ஆண்டு பெர்முடாவை எதிர்த்து 8 விக்கெட் இழப்பிற்கு 409 ரன்கள்
2009ம் ஆண்டு இலங்கையை எதிர்த்து 7 விக்கெட் இழப்பிற்கு 414 ரன்கள்
2010ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவை எதிர்த்து 3 விக்கெட் இழப்பிற்கு 401
2011ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசை எதிர்த்து 5 விக்கெட் இழப்பிற்கு 418 ரன்கள்
2014ம் ஆண்டு இலங்கையை எதிர்த்து 5 விக்கெட் இழப்பிற்கு 404 ரன்கள்
என்று ஏற்கனவே சாதனை படைத்திருந்த இந்தியா தற்போது நடைபெற்ற வங்கதேசத்துடனான 3வது ஒருநாள் போட்டியில் 6வது முறையாக 400 ரன்களை கடந்து 409 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. இதில் இஷான் கிஷான் 131 பந்துகளில் 210 ரன்களும், விராட் கோலி 93 பந்துகளில் 119 ரன்களும் எடுத்து அசத்தினர். 410 ரன்கள் என்ற கடின இலக்குடன் பங்களாதேசம் தனது பேட்டிங்கை தொடங்கியது. 34 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 182 ரன்கள் மட்டுமே அந்த அணி எடுத்தது. இதனால் இந்தியா 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் ஏற்கனவே 2 போட்டிகளில் வங்கதேச அணி வெற்றி பெற்றுள்ளதால் தொடரை கைப்பற்றியது.