Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நேபாளத்திற்கு ‘பெய்லி’ பாலம் அனுப்பும் இந்தியா

நேபாளத்திற்கு 'பெய்லி' பாலம் அனுப்பும் இந்தியா

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேபாளம் – சீன எல்லையில் கடும் வெள்ளப்பெருக்கு!வரலாற்றுச் சிறப்புமிக்க மிதேரி புல் (Miterepul) ரசுவகதி நட்புப் பாலம் (Friendship Bridge) வெள்ளத்தில் …

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி உயிர் பிழைத்தவர்களை மீட்கும் பணியில் அவசரக்காலக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கி இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் இன்னும் காணாமல் போயுள்ள நிலையில், அதிகாரப்பூர்வ உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் நேபாளத்திற்கு 47.5 டன் நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு, மாடுலர் எஃகுப் பலகைகளால் ஆன, எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய மற்றும் முன்பே தயாரிக்கப்பட்ட ‘பெய்லி’ (Bailey) பாலத்தை இந்தியா அனுப்பவுள்ளது.

நேபாளத்தில் உயிரிழந்தவர்களில் இதுவரை 123 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 245 பேர் மாயமாகியுள்ளனர். 67 பேர் காயமடைந்துள்ளனர். 384 சுற்றுலாப் பயணிகள் மாயமானதாக கூறப்படுகிறது. இவர்களில் 291 பேர் வெளிநாட்டினர், 93 பேர் நேபாளிகள். வாகனப் போக்குவரத்துக்கான 35 பாலங்கள் மற்றும் 45 தொங்கு பாலங்கள் சேதமடைந்துள்ளன. 40 கி.மீ நீளமுள்ள சாலைகள் சேதமடைந்துள்ளன. ஹெலிகாப்டர்கள் மூலம் 116 பேரும், தரைவழியாக 93 பேரும் மீட்கப்பட்டுள்ளனர். நேபாள ராணுவத்தைச் சேர்ந்த 44 பேர், காவல்துறையைச் சேர்ந்த 28 பேர் மற்றும் ஆயுதப் போலீஸ் படையைச் சேர்ந்த 13 பேர் ஆகியோரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. தேடுதல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

error: Content is protected !!