Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்தியாவுடன் இன்று 3வது டி20….. தொடரை வெல்லுமா வெஸ்ட் இண்டீஸ்?

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி கயானாவில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் வெஸ்ட் இண்டீஸ்வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரில் 2-0 என முன்னிலை பெற்றது. இந்நிலையில், இந்த போட்டியின்போது நடுவரை விமர்சித்த குற்றத்திற்காக வெஸ்ட் இண்டீஸ் அணியில் நட்சத்திர ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான நிகோலஸ் பூரனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் போட்டிக் கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. போட்டியின்போது, ஐசிசி விதிகளை மீறியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளத குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மோதும் 3வது டி20 போட்டி கயானாவில் உள்ள புரோவிடென்ஸ் ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை)  இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.  இதிலும்  வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றிவிடும். எனவே இந்தியா அணி இன்று வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!