Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்தூர் டெஸ்ட்… இந்தியா மோசமான ஆட்டம்….. 5 விக்கெட் இழந்து 66 ரன்

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2 டெஸ்ட்கள் ஏற்கனவே நடைபெற்றுவிட்டன. இதில், 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி இன்று இந்தூரில் நடைபெறுகிறது. இதில், டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் கேஎல் ராகுல் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக சுப்மன் கில் இடம் பெற்றார்.

தொடக்க ஆட்டகாரர்களாக கேப்டன் ரோகித்,  கில் ஆகியோர் இறங்கினர்.  இவர்கள் நிதானமாக ரன் சேர்த்தனர். 22 பந்துகளில் 12 ரன் எடுத்திருந்த  ரோகித் இறங்கி வந்து அடிக்க முற்பட்டபோது  ஸ்டம்பிங் செய்யப்பட்டு அவுட் ஆனார். அவருக்கு பதில் புஜாரா களமிறங்கினார். 6 ஓவர் முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் எடுத்திருந்தது.

அதைத்தொடர்ந்து கில்(21),  புஜாரா(1),  ஜடேஜா(4) என அனைவரும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். இதனால் இந்தியா 44 ரன் எடுப்பதற்குள்  முக்கியமான 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறிக்கொண்டிருந்தது.  சிறிது நேரத்தில் ஸ்ரேயஸ் அய்யர்(0) டக் அவுட் ஆனார்.

மதிய உணவு இடைவேளைக்கு முன்னதாக 18 ஓவரில்  இந்தியா 5 விக்கெட்டுகள் இழந்து66 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான நிலையில் இருந்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!