சென்னை,பூந்தமல்லியை சேர்ந்த விக்னேஷ் என்பவர், இன்ஸ்டா மார்ட் மூலம் ஆர்டர் செய்த முட்டைகள் கெட்டுப்போனதாகவும், காலாவதியான நிலையில் இருந்ததாகவும் உணவு பாதுகாப்புத் துறையில் புகார் அளித்தார். இதையடுத்து, பூந்தமல்லியில் உள்ள இன்ஸ்டா மார்ட் கிடங்கில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கு பூச்சிகள் இருந்ததாகவும், சில பொருட்கள் காலாவதியான நிலையில் இருந்ததாகவும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கிடங்கிற்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
