Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஈரானில் உள்ள இந்திய மாணவர்களை பாதுகாக்க நடவடிக்கை- தூதரகம் தகவல்

ஈரான், இஸ்ரேல் இடையே  போர் தொடங்கி உள்ளது. இரு நாடுகளம், ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் மேலும் உக்கிரமடையும் என்று  கூறப்படுகிறது.  இதனால் ஈரானில் உள்ள இந்தியர்களை பாதுகாக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. 

ஈரானில் தற்போது 4,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்களில் பாதி பேர் மாணவர்கள். ஈரானில் உள்ள பெரும்பாலான இந்திய மாணவர்கள் ஜம்மு-காஷ்மீரை சேர்ந்தவர்கள். அவர்கள் மருத்துவம் மற்றும் பிற தொழில் முறை படிப்புகளில் சேர்ந்துள்ளனர். குறைந்த செலவு மற்றும் ஒத்த கலாச்சார சூழல் காரணமாக காஷ்மீர் மாணவர்கள் பொதுவாக ஈரானிய பல்கலைக்கழகங்களைத் தேர்வு செய்கிறார்கள்.

இது குறித்து  ஈரான் தலைநர் டெஹ்ரானில்  உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், “இங்குள்ள பாதுகாப்பு நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, சில மாணவர்கள் ஈரானுக்குள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுகிறார்கள். பிற சாத்தியமான விருப்பங்களும் பரிசீலனையில் உள்ளன. அவ்வப்போது புதிய தகவல்களை பகிரப்படும்” என்று தெரிவித்துள்ளது.

 

 

 

error: Content is protected !!