மத்திய கிழக்கில் ஈரான்-அமெரிக்கா இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. கடந்த பிப்ரவரி 28 முதல் நீடிக்கும் இந்த பதற்றத்தின் தொடர்ச்சியாக, கடந்த 3ஆம் தேதி அமெரிக்கா ஈரானின் குவாசம் தீவை தாக்கியது. பதிலடியாக பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, இன்று (நவ., 18) குவைத்தில் உள்ள அலி அல் சலேம் விமானத் தளத்தை டிரோன்கள் மூலம் தாக்கியதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. குவைத் அரசு இதனை ‘குற்றவியல்’ தாக்குதல் எனக் கண்டித்துள்ளது.
அமெரிக்க ராணுவ தளத்தை தாக்கியதாக ஈரான் தகவல்
