Skip to content
Home » ‘புரொபஷனல் கொரியரில் 2வது நாளாக ஐடி ரெய்டு

‘புரொபஷனல் கொரியரில் 2வது நாளாக ஐடி ரெய்டு

‘புரொபஷனல் கொரியர்’ என்ற தனியார் கூரியர் நிறுவனம் கடந்த 1989-ம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் இந்தியா, துபாய், சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சுமார் 3 ஆயிரத்து 300 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சென்னை நுங்கம்பாக்கம், கத்தீட்ரல் கார்டன் பகுதியிலும், பதிவு அலுவலகம் சென்னை ஆழ்வார்பேட்டையிலும் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தினர் முறையாக வருமானவரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்து வருவதாக வருமானவரி துறை அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது. அதனடிப்படையில் கூரியர் நிறுவனத்துக்கு சொந்தமான சென்னை மண்டலத்திற்கு தொடர்புடைய நுங்கம்பாக்கம், பாரிமுனை, ஆழ்வார்பேட்டை, கிண்டி, மண்ணடி, கோயம்பேடு ஆகிய 6 இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், வரி ஏய்ப்பு புகார் எதிரொலியாக ‘புரொபஷனல் கூரியர்’ நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் 2-வது நாளாக இன்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நுங்கம்பாக்கம், பிராட்வே உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை முழுமையாக முடிந்த பின்பே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் கணக்கில் காட்டப்படாத பணம், நகைகளின் மதிப்பு எவ்வளவு? என்பது குறித்த தகவல்கள் வெளியாகும் என்று வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!