ஜெயிலர் 2 திரைப்படம் வெளியீடு: கரூரில் ரஜினி ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்து பூக்கள் தூவி உற்சாகக் கொண்டாட்டம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
இதன் ஒரு பகுதியாக, கரூர் மாவட்டத்தில் நான்கு திரையரங்குகளில் இப்படம் வெளியானது.

இதனை முன்னிட்டு திரையரங்குகள் முன்பு திரண்ட ரஜினி ரசிகர்கள், ஆட்டம் பாட்டத்துடன் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், திரையரங்குகள் முன்பு வைக்கப்பட்டிருந்த

ரஜினிகாந்தின் பிரம்மாண்ட கட்-அவுட்களுக்கு பால் அபிஷேகம் செய்தும், மலர்களைத் தூவியும் உற்சாகமாகக் கொண்டாடினர்.
தொடர்ந்து, ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு மதிய உணவாகப் பிரியாணி வழங்குவதற்கான டோக்கன்களும் விநியோகிக்கப்பட்டன. இதனால் கரூரில் ஜெயிலர் 2

திரைப்பட வெளியீடு ரசிகர்களிடையே திருவிழாக் கொண்டாட்டமாக அமைந்தது.

கடந்த 40 ஆண்டுகளாக ரஜினி ரசிகர்கள் கொண்டாடும் ஒரே இடம் திரையரங்கம் மட்டும்தான், இவ்வளவு ஆண்டுகளாக இளமையுடன் இருக்கின்றார் எங்களையும் இளமையாக வைத்திருக்கின்றார்.
