Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

யமுனையில் மீண்டும் அபாய கட்டத்தில் வெள்ளம்

யமுனை நதியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான, டில்லி, இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், அரியானா உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக, கொட்டி தீர்த்த கனமழையால், யமுனை நதியின் நீர்மட்டம் மீண்டும் அபாய அளவை தாண்டி உள்ளது. நேற்று மாலை 6மணி நிலவரப்படி, யமுனை நதியின் நீர்மட்டம், 205.39 மீட்டராக அதிகரித்துள்ளது. கடந்த மாதம் பெய்த பருவமழையின்போது 208.66 மீட்டராக இருந்தது குறிப்பிடத்தக்கது.  யமுனை நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், புதுடில்லியின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் வழிந்தோடி வருகிறது. ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், புதுடில்லியின் பல்வேறு இடங்களில், குடிநீர் வினியோகம் தடைபடும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!