Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஐசிசி தலைவராக ஜெய் ஷா மீண்டும் தேர்வு

ஐசிசி தலைவராக ஜெய் ஷா மீண்டும் தேர்வு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக ஜெய்ஷா தொடர்ந்து 2-வது முறையாக மீண்டும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற ஐசிசி நிர்வாக குழு கூட்டத்தில், வேறு யாரும் போட்டியிடாத நிலையில் ஜெய் ஷா தலைவராக போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2024-ம் ஆண்டு முதல் முறையாக ஐசிசி தலைவரான அவர், தற்போது 2-வது முறையாக பொறுப்பேற்பதன் மூலம் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை வழிநடத்தும் முக்கிய பொறுப்பையும் வகிக்க உள்ளார்.

error: Content is protected !!