Skip to content
Home » ஜேஇஇ நுழைவுத்தேர்வு இன்று துவங்கியது

ஜேஇஇ நுழைவுத்தேர்வு இன்று துவங்கியது

  • by Senthil

என்ஐடி மற்றும் ஐஐடிகளில் இளநிலை பொறியியல் பட்டப்படிப்புகளில் சேருவதற்கான ஜேஇஇ (ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு) தேர்வு  நாடு முழுவதும் இன்று தொடங்கியது.

290 மையங்களில் இந்த தேர்வு நடக்கிறது. இந்தத் தேர்வில் 8.5 லட்சம் மாணவ, மாணவிகள்  பங்கேற்கிறார்கள். பதிவு செய்துள்ளனர். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் இந்தத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

ஜேஇஇ தேர்வானது ஜேஇஇ.முதல்நிலை (மெயின்), ஜேஇஇ முதன்மை (அட்வான்ஸ்டு) என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். முதல்நிலைத் தேர்வு என்டிஏ (தேசிய தேர்வு முகமை) சார்பிலும், முதன்மைத் தேர்வு ஏதாவது ஒரு ஐஐடி சார்பிலும் நடத்தப்படும்.

ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்ஐடி, ஐஐஐடி போன்ற மத்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் இளநிலை பொறியியல் தொழில்நுட்பப் படிப்புகளில் சேர்க்கை பெற முடியும். அதுபோல, தேர்வில் முதல் 2.5 லட்சம் இடங்களில் தகுதி பெறுபவர்கள் ஐஐடி- க்களில் சேர்க்கை பெறுவதற்கான முதன்மைத் தேர்வில் பங்கேற்கும் தகுதியைப் பெறுவர்.

அந்த வகையில், 2023-ம் ஆண்டுக்கான ஜேஇஇ முதல்நிலை முதல் தவணைத் தேர்வு இன்று தொடங்கியது. இந்த தேர்வு 25, 29, 30, 31 மற்றும் பிப்ரவரி 1-ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. திருச்சியிலும் இந்த தேர்வு இன்று தொடங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!