Skip to content

வேலை செய்த வீட்டில் நகை திருட்டு.. 3வயது சிறுவன் மூச்சுதிணறி பலி-திருச்சி க்ரைம்..

வேலை செய்த வீட்டில் நகை திருடிய ஊழியர் கைது..  திருச்சி பீமநகர் புதுசெட்டி தெரு பகுதியைச் சேர்ந்தவர் முரளி குமார் (வயது 51 )இவரது வீட்டில் கடந்த 4 மாதங்களாக திருச்சி லால்குடி நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் (வயது 25 )என்பவர் வேலை செய்து வந்தார் . இந்த நிலையில் அவர் வீட்டில் இருந்த 9 கிராம் தங்க மோதிரம் ஒன்றை திருடியதாக தெரிகிறது. இது குறித்து முரளி குமார் பாலக்கரை குற்றப்பிரிவு போலீஸ் புகார் செய்தார் .அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்கு பதிவு செய்து வீட்டு வேலைக்காரர் ஜெயப்பிரகாசை கைது செய்தார். 3 வயது சிறுவன் மூச்சு திணறி சாவு திருச்சி கிராப்பட்டி ரயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் கணேச மூர்த்தி. இவருக்கு திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆகிறது. இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர் .இதில் மூத்த மகன் சர்வேஷ் விசாக் (வயது 3 )கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தான். இந்த நிலையில் அவனுக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பெற்றோர் அவனை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு சர்வேஷ் விசாக் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   சிவில் இன்ஜினியரிங் பட்டதாரி  தற்கொலை திருச்சி சுப்பிரமணியபுரம் பன்னீர்செல்வம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 58 )சிவில் இன்ஜினியரிங் பட்டதாரி. இவர் நிலையான வேலையில்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் குடி போதைக்கு அடிமையானார். ஓய்வு பெறும் வயதில் கூட தனக்கு ஒரு நிரந்தர வேலை அமையவில்லையே என கவலை அடைந்த ஜெயராஜ் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென மனைவியின் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இது குறித்து அவரது மனைவி சந்திரகுமாரி கே.கே.நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   காரில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது திருச்சி கோட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட மலைக்கோட்டை ஓயாமரி ரோடு பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒருகார் நின்று கொண்டிருந்தது. உடனே அந்த பகுதியில் ரோந்து சென்ற கோட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மாதவன் அந்த வாகனத்தை சோதனை இட்டார். அப்போது அதில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து போலீசார் 1300 கிராம் கஞ்சாவை கைப்பற்றி இது தொடர்பாக திருச்சி கொட்டப்பட்டு மொராய்ஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்த வீர கணேஷ் (வயது 30) என்பவரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அசோக் குமார் தப்பி சென்று விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். போதை மாத்திரைகள் விற்பனை- 2 வாலிபர்கள் கைது திருச்சி கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஷோபிஸ் கார்னர் அருகே இரண்டு மர்ம நபர்கள் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் திவ்ய பிரியா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போதை மாத்திரைகள் விற்றுக் கொண்டிருந்த திருச்சி அரியமங்கலம் மலையப்ப நகர் அண்ணா தெரு பகுதியைச் சேர்ந்த ஜோதி (வயது 37), திருச்சி இ.பி ரோடு கீழ தேவதானம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 40) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து 100 மில்லி எடை கொண்ட 30 மாத்திரைகள், ஊசி ,தண்ணீர் பாட்டில் ஆகியவை கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
error: Content is protected !!