Skip to content
Home » ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் பாலத்தின் கீழ் முதியவர் சடலம் மீட்பு..?..

ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் பாலத்தின் கீழ் முதியவர் சடலம் மீட்பு..?..

  • by Senthil

ஜெயங்கொண்டம் அருகே தா பழூர் கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தின் கீழ் முதியவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி மற்றும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து தா பழூர் அருகே உள்ள மதனத்தூர் கொள்ளிடம் ஆற்றின் கரையிலிருந்து தஞ்சை மாவட்டத்தை இணைக்கும் நீலத்தநல்லூர் கொள்ளிடம் ஆற்றுப் பாலம் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிலர்  அப்பாலத்தின் கீழ் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் படுத்திருந்ததையும் அவர் அருகில் பூச்சி மருந்து பாட்டில் இருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்து  தா பழூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தா.பழூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் அருகே சென்று பார்த்த போது  முதியவர் ஏற்கனவே இறந்து போனது தெரிய வந்தது. இதனையடுத்து அவர் அருகில் வைத்திருந்த பையை ஆய்வு செய்து பார்த்தபோது அதில் அந்த முதியவரின் ஆதார் அடையாள அட்டையின் நகல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஆதார் அடையாள அட்டையில் இருந்து தற்கொலை செய்து இறந்து போன தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார் கோவில் போலீஸ் சரகம்

மருதநல்லூர் கருப்பூர் அருவேலி கீழத்தெருவை சேர்ந்த பக்கிரி மகன் சுந்தரமூர்த்தி(60) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரது குடும்பத்தாருக்கு  அவரது இறப்பு குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தா பழூர் போலீசார்  மருந்து குடித்து இறந்து போன முதியவர் சுந்தரமூர்த்தியின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர் எப்படி இங்கு வந்தார்? எதற்காக இறந்தார்? அவரை தற்கொலைக்கு தூண்டியது யார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளிடக்கறையில் முதியவர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!