Skip to content
Home » பிரபல இசையமைப்பாளர் கே.ஜி.ஜெயன் காலமானார்

பிரபல இசையமைப்பாளர் கே.ஜி.ஜெயன் காலமானார்

விஜயன் மற்றும் கே.ஜி. ஜெயன் இருவரும் கேரளாவில் புகழ்பெற்ற இரட்டை சகோதரர்கள். இவர்கள் இருவரும் இணைந்து, ‘ஜெயவிஜய’ என்ற அடையாளத்தோடு இசைத்துறையில் வலம் வந்தனர். விஜயன் 1986ஆம் ஆண்டு காலமானார்.

விஜயன் மற்றும் கே.ஜி. ஜெயன்
விஜயன் மற்றும் கே.ஜி. ஜெயன்

கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த கே.ஜி. விஜயன், திருப்புனித்துறையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 90. இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியுள்ளார். பல்வேறு முன்னணி கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றினார்.

திரைத்துறையில் பல பாடல்களில் பணிபுரிந்தாலும் இவர் பக்திப் பாடல்களுக்காக ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றவர். இவர் 1991 இல் கேரள சங்கீத நாடக அகாடமி விருதையும், 2013 இல் ஹரிவராசனம் விருதையும் பெற்றார்.

Manoj K.Jayen's biography | ஊர்வசியை விவாகரத்து செய்த நடிகர் மனோஜ் கே.ஜெயன்  எழுதிய சுயசரிதை

‘நக்‌ஷத்ர தீபங்கள்’, ‘மாணிக்யவீணை’, ‘ஸ்ரீகோவில் நடக்குறான்னு’, ‘மாளிகாபுரத்தம்மா’, போன்றவை இவர்களின் இசையமைப்பில் வந்த புகழ்பெற்ற சில பாடல்கள் ஆகும். பிரபல மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயன் இவருடைய மகன் ஆவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!