Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கடும் பனிப்பொழிவு…. நாகையில் வாகன ஓட்டிகள் அவதி…. படங்கள்…

நாகை மாவட்டம், முழுவதும் கடும் பனிப்பொழிவு காரணமாக சாலைகள் அனைத்தும் புகை மண்டலமாக மாறி காட்சியளிக்கிறது. காலை 8 மணிக்குப் பின்னர் 9 மணியை நெருங்கும் நிலையிலும் பனிமூட்டம் கடுமையாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சாலை தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி தங்களது வாகனங்களில் செல்கின்றனர். மேலும் அன்றாட பணிகளுக்கு செல்வோரும் பாதசாரிகளும் உடற்பயிற்சி மேற்கொள்வோரும் இந்த

பனிப்பொழிவு காரணமாக கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக வலிவலம்,வல்லம்,கீழ வெளி,ஏர்வைக்காடு வாழக்கரை,திருப்பூண்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. கிராமப்புறத்தில் உள்ள குளம் ஆறு வாய்க்கால் உள்ளிட்ட நீர்நிலைகளும் பனியால் முழுமையாக சூழ்ந்து பனி போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கிறது.காலை 8.30 மணியைக் கடந்தும் பனிப்பொழிவின் தாக்கம் குறையாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!