Skip to content
Home » பல்வேறு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 4 ஆயிரத்து 775 கிலோ கஞ்சா அழிப்பு…

பல்வேறு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 4 ஆயிரத்து 775 கிலோ கஞ்சா அழிப்பு…

  • by Senthil

தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டி அருகே அயோத்திப்பட்டி தனியார் தொழிற்சாலையில் 10 மாவட்டங்களில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 4 ஆயிரத்து 755 கிலோ கஞ்சாவை, அந்தந்த மாவட்ட போலீசார் மூட்டைகளாக கட்டி அழித்தனர்.

போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்டு பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 13 ஆயிரம் கிலோ கஞ்சாவை அழிக்கும் நிகழ்ச்சி தமிழகத்தில் 5 மண்டலங்களில் நடைபெற்றது.

அதன்படி தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள அயோத்திப்பட்டியில் தனியார் தொழிற்சாலையில் கஞ்சா அழிக்கும் பணி நடந்தது. திருச்சி, பெரம்பலூர், திருவாரூர், கரூர், அரியலூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 4 ஆயிரத்து 755

கிலோ கஞ்சாவை, அந்தந்த மாவட்ட போலீசார் ராட்சத இயந்திரகளில் போட்டு அழித்தனர். இதில் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன், தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜெயசந்திரன், திருச்சி சரக டி.ஐ.ஜி. பகலவன், தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத், திருச்சி துணை கமிஷனர் அன்பு மற்றும் மாவட்ட ஏ.டி.எஸ்.பி.க்கள், போலீஸார் கலந்து கொண்டனர்.

பின்னர் மத்திய மண்டல ஐ.ஜி., கார்த்திகேயன் நிருபர்களிடம் கூறியதாவது… முதல்வரின் உத்தரவுப்படி போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு நிகழ்ச்சி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது மத்திய மண்டலத்தில் கைப்பற்றப்பட்ட கஞ்சா பொருட்களை அளிக்கும் நிகழ்ச்சி அயோத்திபட்டியில் நடந்தது. 267 வழக்குகள் மூலம் கைப்பற்றப்பட்ட கஞ்சா பொருட்களை அழித்துள்ளோம். வட மாநிலம் மற்றும் ஆந்திராவில் இருந்து தமிழகம் வழியாக இலங்கைக்கு கடத்த முற்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா அழிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது. கூடுதலாக சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கெள்ளப்படும். சோதனை சாவடிகளில் நவீன கேமராக்கள் பொருத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!