Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சொகுசு காரில் 1000 மதுபாட்டில்கள் கடத்திய மூதாட்டி உள்பட 2 பேர் கைது…..

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மன்னார்குடிக்கு மதுபானங்கள் கடத்தப்படுவதாக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து மதுவிலக்கு டிஎஸ்பி கென்னடி தலைமையிலான தனிப்படை போலீசார் திருக்கண்ணபுரம்- புதுக்கடை பாலம் அருகே வாகன சோதனை மேற்கொண்டு வந்தனர். அப்போது வேகமாக வந்த ஒரு சொகுசு காரை தடுத்து நிறுத்திய தனிப்படை போலீசார், காரில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர் காரில் இருந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியதை

தொடர்ந்து காரை சோதனை மேற்கொண்டதில் அதில் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபானங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடத்தி வரப்பட்ட 50 ஆயிரம் மதிப்புள்ள ஆயிரம் மதுபாட்டில் மற்றும் நான்கு லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், நாகை மருந்து கொத்தளரோடு பகுதியைச் சேர்ந்த விஜயகாந்த் மற்றும் மன்னார்குடி பூக்காரத்தெருவை சேர்ந்த மூதாட்டி பெருமாயி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!