கராத்தே போட்டியில் 1 தங்கம், 3 வெண்கலம் பதக்கங்கள் வென்று திருச்சி மாணவர்கள் சாதனை
சேலம் மே 17 தமிழ்நாடு மாநில கராத்தே சங்கத்தின் சார்பாக, சேலம் பத்மவாணி பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற, மாநில அளவிலான கராத்தே போட்டியில், தமிழ்நாடு முழுவதும் சுமார் 3000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.
இதில் திருவெறும்பூர் அருகே உள்ள பிரகாஷ் நகரில் இயங்கி வரும், தமிழ் வாரியர் கராத்தே அகாடமி சார்பாக, மாணவ மாணவியர்கள் பங்கெடுத்தனர். இந்த போட்டியில் T. Jerin- தங்கம், P. Lakshana- வெண்கலம், G. Yazhini- வெண்கலம், A. Pranitha- வெண்கலம் பதக்கங்கள் வென்று, வரும் ஜூன் மூன்றாம் தேதி, உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் -இல் நடைபெற இருக்கும் இந்திய அளவிலான கராத்தே போட்டியில் தமிழ்நாடு கராத்தே அணி சார்பாக பங்கெடுக்க உள்ளனர். இப் போட்டியில் வெற்றி பெற்றவர்களை தமிழ் வாரியர் கராத்தே அகாடமியின் தலைமை பயிற்சியாளர் மாஸ்டர் கராத்தே ஆர். சுதாகர் வாழ்த்துகள் தெரிவித்து பாராட்டினார்.
