கர்நாடக பக்தர் திடீர் சாவு
கர்நாடக மாநிலம் பெங்களூர் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் வயது 76.
இவர் தனது இரண்டாவது மனைவி விஜயலட்சுமி( 57)யுடன் திருச்சி வந்தார். பின்னர் சமயபுரம் மாரியம்மன் தரிசிப்பதற்காக கணவன் மனைவி இரண்டு பேரும் அங்குள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். பின்னர் அதிகாலை எழுந்து விஜயலட்சுமி கோவிலுக்கு செல்ல ஆயத்தமானார். ஆனால் ஜெயக்குமார் வெகு நேரம் ஆகியும் எழுந்திருக்கவில்லை. அவரை தட்டி எழுப்ப முயன்ற போது எந்த பேச்சு மூச்சும் இல்லை. அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி உடனடியாக கணவரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இரவு மாரடைப்பில் அவர் இறந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில்
சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவெறும்பூர் அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
திருச்சி, திருவெறும்பூர் அரசன்குடி கீழ விளாங்குளம் கிழக்குத் தெரு பகுதியை சேர்ந்தவர் பழனி இவரது மகன் ஜெகநாதன் வயது 29 இவர் சமீபத்தில் நண்பர்களிடம் கடன் வாங்கி வெளிநாட்டுக்கு வேலைக்கு புறப்பட்டுச் சென்றார். பின்னர் வேலை சரியாக அமையாமல் உடனடியாக நாடு திரும்பினார். அதைத்தொடர்ந்து கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு நெருக்கடி கொடுத்தனர் இதனால் ஜெகநாதன் தனது வேளாண் நிலத்தின் ஒரு பகுதியை விற்பனை செய்து சில பேருக்கு பணத்தை திரும்ப கொடுத்தார். இருப்பினும் அவருக்கு கடன் இருந்துள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ஜெகநாதன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஃபேன் கொக்கியில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார் இது குறித்து அவரது தந்தை பழனி திருவெறும்பூர் போலீசில் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
