கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் அருகே தத்துவாஞ்சேரியில் உள்ள இந்தியன் வங்கியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முக்கிய ஆவணங்கள் எரிந்து சேதம் . வங்கியில் நகைகளை அடமானம் வைத்திருப்பவர்களும் , லாக்கரில் நகை வைத்திருப்பவர்களும் வங்கி முன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியன்வங்கி மண்டல மேலாளர் நகைகளும் பணமும் பத்திரமாக உள்ளது ஆவணங்கள் மட்டும் எரிந்துள்ளது என விளக்கம் அளித்ததும் மக்கள் அமைதி .
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் திருப்பனந்தாள் அருகே உள்ள தத்துவாஞ்சேரியில் அமைந்துள்ள இந்தியன் வங்கியில் இன்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
பழைய ஆவணங்கள் எரிந்ததால் கடும் புகை மூட்டம் எழுந்தது .
இந்தியன் வங்கியில் தீ விபத்து என்ற தகவல் பரவியதும் நகைகளை அடமானம் வைத்திருப்பவர்களும் , லாக்கரில் நகைகளை வைத்திருப்பவர்களும் பணத்தை டெபாசிட் செய்திருப்பவர்களும் வங்கி முன் குவிந்தனர் .
இதற்கிடையில் தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைத்தனர்.
இந்த வங்கியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான அடமானம் வைக்கப்பட்ட நகைகளும் லாக்கரில் வைக்கப்பட்ட நகைகளும் உள்ளது .
அதை போல் பல கோடி ரூபாய் ரொக்கமும் உள்ளது.
நல்ல வேலையாக பணமும் நகைகளும் தப்பியது .
கும்பகோணத்தில் இருந்து வந்திருந்த இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் சுப்பிரமணியன் பொது மக்களிடம் நகையை நகைகளும் பணமும் பத்திரமாக உள்ளது என உறுதி அளித்ததுடன் உங்களது நகைகளை நாளை சரி பார்த்துக் கொள்ளலாம் என உத்தரவாதம் அளித்தார் .
இதனைத் தொடர்ந்து வங்கி முன் குவிந்த பொதுமக்கள் கலைந்தனர் .
தீ விபத்திற்கான காரணம் மின் கசிவாக இருக்கலாம் என கூறப்படுகிறது .
நான்காண்டுகளுக்கு முன்பு இதே வங்கியில் பணிபுரிந்த கிளை மேலாளர் சுமார் 2 கோடி ரூபாய் அளவிற்கு வாடிக்கையாளர் பெயர்களில் கடன் பெற்று மோசடி செய்ததாகவும் அதனைப் போல் தற்போது நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் பொதுமக்கள் குவிந்தனர் .
வங்கியில் தீப்பிடித்தது என தகவல் காட்டு தீயாய் பரவவே சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் அங்கு குவிந்ததால் காவல்துறையினர் மிகவும் சிரமப்பட்டு அவர்களை கட்டுப்படுத்தினர் இந்த சம்பவத்தால் தத்துவாஞ்சேரி பகுதியில் 3 மணி நேரம் பதட்டமான சூழல் நிலவியது
பொதுமக்கள் பேட்டி மற்றும் இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் சுப்பிரமணியன் பேட்டியும் உள்ளது .
