தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைத் தமிழ்த் திரையுலகம் சார்பில் கொண்டாட இருக்கின்றனர். இதற்கான பிரமாண்ட விழா அடுத்த மாதம் சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளைத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் செய்து வருகின்றனர்.
“தமிழ் சினிமாவில் கலைஞர் ஐயாவின் பங்கு பெருமைக்குரிய ஒன்று. வசனகர்த்தாவாக, தயாரிப்பாளராக, பாடலாசிரியராக கலைஞர் ஐயா தனிப்பட்ட முறையில் பங்களிப்பு ஆற்றியதுடன், தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு எண்ணற்ற வகைகளில் உதவிகள் செய்திருக்கிறார். அவருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுவதைப் பெருமையாக நினைக்கிறோம். கலைஞர் ஐயாவிற்கு விழா எடுப்பது குறித்து எங்க பொதுக்குழுவிலேயே தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். அத்தனை பேரும் ஒருமித்த குரலில் மகிழ்வுடன் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் இன்று காலை நடிகர் கார்த்தி, பூச்சி முருகன், தயாரிப்பாளர் முரளி ராமசாமி ஆகியோர் சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்து இந்த விழா தொடர்பாக பேசினர். அவரும் விழாவில் பங்கேற்பதை உறுதி செய்தார். இதுபோல தெலுங்கு, கன்னடம், மலையாளம் திரையுலக ஜாம்பவான்களும் விழாவில் பங்கேற்க உள்ளனர். விழா வரும் டிசம்பர் மாதம் 24ம் தேதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.