Skip to content
Home » கரூர் வரும் அமைச்சர் உதயநிதிக்கு சிறப்பான வரவேற்பு….அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்பாடு

கரூர் வரும் அமைச்சர் உதயநிதிக்கு சிறப்பான வரவேற்பு….அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்பாடு

  • by Senthil

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின், கரூர் மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கவுள்ளார்.    இந்த விழாவில் பங்கேற்க அவர் கரூர் கரூர்வருகை தர உள்ளார்.   அமைச்சர் பதவி ஏற்றபின் அமைச்சர் உதயநிதி முதன்முதலாக கரூர் வருவதால்  அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க  மின்துறை அமைச்சர்  செந்தில் பாலாஜி  தீவிர ஏற்பாடுகளை செய்துள்ளார்.

அத்துடன்  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவையும் சிறப்பான முறையில் நடத்த  அமைச்சர்

செந்தில் பாலாஜி முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகள் குறித்து இன்று  கரூர் ஆட்சியர் அலுவலகத்தில், மின்துறை அமைச்சர்   செந்தில்பாலாஜி ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.  இதில் கலெக்டர் பிரபு சங்கர், சுந்தரவதனம் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!