Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர்…. ஓடும் காரில் திடீர் தீ

 

கரூர் வெண்ணமலையை சேர்ந்தவர் செந்தில் குமார். முன்னாள் ராணுவ வீரர்.இவர், இன்று அவருக்கு சொந்தமான காரில் வீட்டு சாமான்கள் வாங்க கரூர் வந்துள்ளார். வீட்டு சாமான்கள் வாங்கிய அவர் மீண்டும் வெண்ணைமலை நோக்கி செல்லும் போது, கரூர் – கோவை சாலை பழமுதிர்சோலை அருகே காரின் முன் பக்கம் திடீரென்று புகை  வந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார் மற்றும் உடன் வந்த ஒருவர் என இருவரும் காரை விட்டு இறங்கி தப்பினர். தொடர்ந்து காரில் பற்றிய தீயின் புகை அதிக அளவில் வெளியானது. இதை அடுத்து தகவல் அறிந்த கரூர் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!