Skip to content
Home » கரூரில் நீதிமன்ற ஊழியர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி…

கரூரில் நீதிமன்ற ஊழியர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி…

  • by Senthil

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி உரிமையியல் நீதிமன்றத்தில் துணை நாசராக பணியாற்றி வருபவர் நடராஜன். இவர் கடந்த 06.02.2024 அன்று அரவக்குறிச்சி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் முற்பகல் துணை நாசராக பணியில் சேர்ந்துள்ளார்.

இவருக்கு மருத்துவ மற்றும் தற்செயல் விடுப்புகள் வழங்காமல் நிராகரிக்கப்பட்டதாகவும், கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை இதனால் குடும்பமே சிரமப்பட்டு வருகிறது என்றும், தினசரி பணிக்காக வீட்டிலிருந்து நீதிமன்றத்திற்கு சென்று வர பேருந்துக்கு கூட பணம் இல்லை என கூறியுள்ள நடராஜன், தன்னை கொத்தடிமை போல், தீண்டத்தகாதவர்கள் போல நடத்தப்படுவதாக கடிதம் எழுதி வைத்து விட்டு நீதிமன்றத்தில் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி செய்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பின்பு மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் கரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!