Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது….1.100 கிலோ கிராம் பறிமுதல்….

கரூர் மாவட்டம் குளித்தலை நகரப் பகுதிகளில் போலீசார் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குளித்தலை சுங்ககேட் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது குளித்தலை பழைய கோர்ட் தெருவை சேர்ந்த முருகானந்தம் (36), வை.புதூரை சேர்ந்த சூர்யா (19) ஆகிய 2 பேரும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவினை பதுக்கி விற்று வந்துள்ளனர். இதனைக் கண்ட குளித்தலை போலீசார் அவர்களை சோதனையிட்டதில் அவர்களிடமிருந்து 1.100 கிலோகிராம் கஞ்சாவினை

பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் இருவரையும் குளித்தலை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்னர் குளித்தலை கிளை சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!