Skip to content
Home » ஆஸ்பத்திரியில் இருக்கும் போதேவா?.. கரூரில் தெறிக்கவிட்ட திமுகவினர்… படங்கள்.. வீடியோ..

ஆஸ்பத்திரியில் இருக்கும் போதேவா?.. கரூரில் தெறிக்கவிட்ட திமுகவினர்… படங்கள்.. வீடியோ..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 80 அடி சாலையில் மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைமைக் கழக பேச்சாளர்கள் நாஞ்சில் சம்பத் மற்றும் சைதை சாதிக் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினர்.

அப்போது உரையாற்றிய சைதை சாதிக்… அமலாக்கத்துறை, வருமானவரித்துறை என மத்திய அரசின் ஏஜெண்டாக செயல்படும் அமைப்புகளை வைத்து திமுகவை மிரட்டி பார்க்க நினைக்கிறார்கள். இந்திரா காந்தி எமர்ஜென்சியை அமல்படுத்திய போது அதை எதிர்த்து நின்றவர் கருணாநிதி. அவர் வழிவந்த மு.க.ஸ்டாலின் மற்ற மாநில முதல்வர்களை போல் ரெய்டுகளை கண்டு பயப்படாமல் மோடியை எதிர்த்துப் பேசக்கூடியவர். செந்தில் பாலாஜி மீது வைத்திருந்த பாசமும், நம்பிக்கையும் காரணமாக அவரை கைது செய்த மூன்று மணி நேரத்தில் நான் திருப்பி அடித்தால் தாங்க மாட்டீர்கள் என்று பேசினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். செந்தில் பாலாஜிக்கு எதிராக ஏன் எல்லா வேட்டை நாய்களையும் (IT மற்றும் ED அதிகாரிகளை குறிப்பிடுகிறார்) விடுகிறார்கள். செந்தில் பாலாஜி ஏன் முடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர் வெளியே இருந்தால் பாராளுமன்ற தேர்தலில் திமுகவிற்காக 10 தொகுதிகளை வெற்றி அடைய செய்வார். . செந்தில் பாலாஜியை முடக்க பார்த்தார்கள் ஆனால் மருத்துவமனையில் அவர் சிகிச்சையில் இருந்தாலும் அவர் கண்காணிப்பில் கரூரில் இவ்வளவு பெரிய பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக முன்மொழிந்து கவர்னருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. மத்திய அரசுக்காக இங்கிருக்கும் ஏஜென்ட். செந்தில்பாலாஜி அமைச்சராக தொடரக்கூடாது என்று கவர்னர் கூறினார். செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!