Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் பெருமாள் கோவில் நிலம் விவகாரம்- கோவிலில் நூதன முறையில் மனு

கரூர் பெருமாள் கோவில் நிலம் விவகாரம்- கோவிலில் நூதன முறையில் மனு

கரூர் பெருமாள் கோவில் நிலம் விவகாரம்: ஆக்கிரமிப்பாளர்கள் என நோட்டீஸ் – கோவிலில் சுவாமியிடம் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பி நூதன முறையில் மனு அளித்து பொதுமக்கள்.

கரூர் தான்தோன்றிமலை பகுதியில் உள்ள ஜெ.ஜெ. நகர் மற்றும் ரெங்கா கார்டன் பகுதிகளில் ஏராளமான குடும்பங்கள் நீண்ட காலமாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள சர்வே எண் 297-க்குட்பட்ட நிலம், தான்தோன்றிமலை

அருள்மிகு வெங்கட்ராமண சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமானது எனக் கூறி, அங்கு வசித்து வரும் பொதுமக்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ்

அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பொதுமக்கள், தாங்கள் பல தலைமுறைகளாக அந்த நிலத்தில் வசித்து வருவதாகவும், 1963 மற்றும் 1967ஆம் ஆண்டுகளில் செட்டில்மெண்ட் தாசில்தார் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில் தங்களுக்கு நில உரிமை இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

நீண்ட காலமாக குடியிருந்து வரும் தங்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் குறிப்பிடுவது ஏற்க முடியாது எனக் கூறிய அவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட நோட்டீஸை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனை வலியுறுத்தும் வகையில், பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தான்தோன்றிமலை அருள்மிகு வெங்கட்ராமண சுவாமியிடம் ஊர்வலமாக வந்து கோவிந்தா கோவிந்தா என கோஷம் எழுப்பி மனு அளிக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் ஜெ.ஜெ. நகர் குடியிருப்போர் நலச்சங்கம், ரெங்கா கார்டன் குடியிருப்போர் நலச்சங்கம், அடிமனை பயனாளிகள் சங்கம், இனம் நிலம் மீட்புக் குழு உள்ளிட்ட பல்வேறு குடியிருப்போர் நல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

பல ஆண்டுகளாக வசித்து வரும் நிலையில் தங்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் குறிப்பிடுவது நியாயமற்றது என தெரிவித்த பொதுமக்கள், தங்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை திரும்பப் பெற வேண்டும் என்றும், நிலம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ள அரசு உத்தரவுகளை முழுமையாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

நிலத்தின் உரிமை தொடர்பான ஆவணங்கள் மற்றும் அரசின் முந்தைய உத்தரவுகளை ஆய்வு செய்து, தங்களது பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும், தமிழக முதல்வர் பரந்தூர் விமான நிலையத்திற்கு தீர்வு கொண்டு வந்தது போல் தமிழக முழுவதும் உள்ள கோவில் இனாம் நிலம் பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!