Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் தூய்மை பணியாளர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

தூய்மை பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம்: புகலூர் நகராட்சியில் குப்பை சேகரிப்பு பணி பாதிப்பு.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புகலூர் நகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் இன்று திடீர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதியதாக பொறுப்பேற்றுள்ள ஆணையர் தூய்மை பணியாளர்களை ஞாயிற்றுக்கிழமை முழுநேர வேலைக்கு வர வேண்டும் எனக் கூறுவதாகவும்,


அதிகப்படியான பணிச்சுமை வழங்கப்படுவதாகவும், அதற்கேற்ற ஊதியம் வழங்கப்படவில்லை எனவும் மேலும், 50 வயதுக்கு மேற்பட்ட தூய்மை பணியாளர்களை பணிக்கு வர வேண்டாம் என கூறுவதாகவும், இதனால் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

இதன் காரணமாக புகலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு தோறும் குப்பை சேகரிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர்கள் பணிக்கு செல்லாததால் பொதுமக்களின் வீடுகளில் குப்பைகள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், அன்றாட குப்பை அகற்றும் சேவையும் முடங்கியுள்ளது.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி தலைவர் குணசேகரன் தூய்மை பணியாளரிடம் பேச்சுவார்த்தைகள் ஈடுபட்டு வருகிறார்.

error: Content is protected !!