Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்…

கரூர் – 20.01.2024

 

தை மாத கிருத்திகை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் தேர் வீதி அருள்மிகு

ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பாலமுருகனுக்கு தை மாத கிருத்திகை முன்னிட்டு எண்ணைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி ,பன்னீர், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக அழகன் பாலமுருகனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு ஆலயத்தின் சிவாச்சாரியார் சுவாமிக்கு உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார்.

அதை தொடர்ந்து பாலமுருகனுக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது .

தேர்வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற தை மாத கிருத்திகை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய சிவாச்சாரியார் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!