Skip to content
Home » கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்..

கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்..

  • by Senthil

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரூர் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாத ஆருத்ரா தெரிசன நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த 18.12. 2023 திங்கட்கிழமை முதல் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக இன்று கும்ப லக்னத்தில் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தர நாயகி, ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமிகளுக்கு திருக்கல்யாண வைபோகம் நிகழ்ச்சி ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலய மண்டபம் அருகே பிரத்தியேக யாகசாலை அமைத்து யாக வேள்வி நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக யார் வேள்விக்கு மகா தீபாராதனை காட்டப்பட்ட பிறகு, திருமணக்கோளத்தில் காட்சியளித்த அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர், அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, அருள்மிகு ஸ்ரீ சௌந்தரநாயகி

 உள்ளிட்ட சுவாமிகளுக்கு கங்கணம் கட்டும் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்று அதன் தொடர்ச்சியாக சுவாமிக்கு திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சுவாமிகளுக்கு பால்- பழம் வழங்கும் நிகழ்ச்சியும், மொய் வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பின்னர் ஆலயத்தில் கூடி இருந்த அனைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கரூரில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற மார்கழி மாத ஆருத்ரா தெரிசன நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக சுவாமி திருக்கல்யாணம் நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்தனர். அதை தொடர்ந்து இன்று இரவு பிச்சாண்டவர் திருவீதி உலா சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!