Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் ஆசிரியா் தின விழா…..ஆசிரியைகள் நடத்திய கலைநிகழ்ச்சி

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ந்தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சிறந்த மனிதர்களை உருவாக்கும் ஆசிரியர்களை நினைவுகூரும் வகையில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கரூர் வெங்கமேடு ஸ்ரீ அன்னை வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் தின விழா சிறப்பாக நடைபெற்றது.

மிக பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு தொடர்ச்சியாக மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தும் விதமாக பள்ளியின் ஆசிரியைகள்ங சினிமா பாடலுக்கு நடனம் ஆடி மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.

மேலும் இந்த சிறப்பு நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளரும் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கீதா மணிவண்ணன் மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தும் விதமாக தனது பள்ளி ஆசிரியைகளுடன் இணைந்து மியூசிக் பாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது மாணவ, மாணவிகளையும் ஆசிரியர் பெருமக்களையும் உற்சாகப்படுத்தினார். பின்னர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!