கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி வீட்டிலிருந்து கொண்டு டுடோரியலில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில் அந்த சிறுமி தனது வீட்டின் வாசலில் அமர்ந்திருந்துள்ளார். அப்போது காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த பிரதீப்( 22), சதீஷ்குமார் (23), ஹரிபிரசாத்( 21 ) ஆகிய 3 பேரும் மோட்டார் பைக்கில் வந்து அந்த சிறுமியின் வீட்டிற்கு முன் மோட்டார் பைக்கை நிறுத்திவிட்டு சிறுமியை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர் .பின்னர் என்னை காதலிக்க வேண்டும், என்னை காதலிக்கா விட்டால் உன்னை இங்கேயே உன்னை கொன்று விடுவேன் என்று பிரதீப் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது அந்த சிறுமி வீட்டுக்குள் சென்று விட்டார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மூவரும் வீட்டுக்குள் சென்று கதவை தட்டி சிறுமியை வரச் சொல்லி சண்டையிட்டுள்ளனர். அதேபோல் பல நேரங்களில் பள்ளிகளுக்கு செல்லும் வழியிலும், பேருந்து நிறுத்தத்திலும் இதுபோன்று அந்த சிறுமியை பலமுறை தொந்தரவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் எஸ்ஐ போக்சோவில் வழக்கு பதிவு செய்து பிரதீப், சதீஷ்குமார், ஹரி பிரசாத் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர்.